சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

முடியும் பொழுதெல்லாம் விடியும்






வெற்றி பெற்றவனுக்கு எதுவும் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது! தோல்வியுற்றவனுக்கு எதைக் கண்டாலும் பயம் வருகிறது.
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ஹிட்லர் வெற்றிப் பெற்றுக் கொண்டிருத்த நேரத்தில், தோல்வியைப் பற்றி யாராவது  பேசி இருந்தால் சிரித்திருப்பான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியாவில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்று சொல்லி இருந்தால் பிற நாட்டுக்காரர்கள் கூட ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள். இது சாசுவதம், இது நிரந்தரம் என்ற மாயை எல்லோர் கண்ணையும் மறைக்கிறது. முதுகிலே அடி விழும்போதுதான் தனக்கு ஒரு முதுகு  இருப்பதும், அடிக்க ஒரு கம்பு இருப்பதும் புரிகிறது.
தோற்றவர்களையும் நான் மரியாதையாகத்தான் பார்ப்பேன்; காரணம் அவர்களுக்கும் ஒரு காலம் வரும். வென்றவர்களை பரிதாபமாகப் பார்ப்பேன்; ' இவர்கள் எப்போது அடிவாங்கப் போகிறார்களோ?' என்று. வெற்றி மயக்கம், தோல்வி கலக்கம் இரண்டுமற்ற நிலையினை மேற்கொண்டு விட்டவனுக்கு உணர்ச்சி ஒன்றுதான். அது சந்தோஷமும் அல்ல. துக்கமும் அல்ல. அது நிரந்தர நிலை; அதற்கு அழிவு கிடையாது. பாபுவின் தூண்டிலில் இன்று நிறைய மீன் கிடைத்தால், நாளை ராமுவின் தூண்டிலில் அதிக  மீன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக