சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மானுடம் உயர ஒழுக்கம் காப்போம்


[முத்தமிழ் விழாவில் அரங்கேற்றம் நிகழ்த்தியது -2006]
"ஒழுக்கம் காப்போம் " இது நான் கவி பாட வந்த தலைப்பு!
இருக்கையில் ஒழுங்காய் அமர்வது மாணாக்கர் பொறுப்பு!
இருசெவியால் கருத்தாய் கேட்பு 
 இன்ப வாழ்வுக்கு ஒழுக்கமே காப்பு!

புவியில் பல உயிர்கள் பரமன் படைப்பு!
படைத்தும் பரமனுக்கில்லை களிப்பு!
தன்னைக் கண்ணாடியில் பார்த்த எதிரொலிப்பு!
புவியில் வந்து பிறந்தது மனிதனென்னும் உயிர் பிறப்பு!
புவியில் வந்து பிறந்தது மனிதனென்னும் உயர் பிறப்பு!

ஐம்புலன்களை மனத்தால் கட்டி வாழ்வதே சிறப்பு-இலையெனில் 
விலங்கினும் கீழானால் அது -இழிபிறப்பு 

முதல் புலனாம் மெய்யை
தாயின் தொடு உணர்வால் அறியும் மழலை!
முதிர்ந்த பிறகு பெண்ணை-போகப்
பொருளாய் நினைப்பது விடலை!
அறிவு
முதிர்ந்தபிறகு பெண்ணை -போகப்
பொருளாய் நினைப்பது விடலை!
முற்றிய இப்பழக்கத்தால் தாளாத நோய் சேரும் உன் உடலை!

இரண்டாவது புலனாவது வாயே!
இனிய சொல்லால் உறவுகளை இணைத்திடுவாயே!
இன்மைக்கும் மேன்மைக்கும் காரணமானாயே!
இன்மைக்கும் மேன்மைக்கும் காரணம் வாயே!

மூன்றாம் புலனாம் மூக்கு!
முத்தான மூச்சால் அதை வலுவாக்கு!
ஆழ்ந்து சுவாசிக்க மூக்கைப் பழக்கு!
அன்றாட நோய்க்கு அது தரும் விலக்கு!

நான்காம் புலனாவது கண்ணாம்!
நூற்பொருள் அறியாவிடில் வெறும் புண்ணாம்!
'
நான்' எனும் அகந்தை 
அழிந்தால் திறப்பது அறிவுக் கண்ணாம்!நாற்றிசையிலும் 'என் கேளிர்' என்றே
விளிப்பது  சிறந்த  பண்ணாம்!

ஐந்தாம் புலனாகும் செவியே!
ஐயமின்றி உணர்வாய்  இனியே!
ஈன்றோரின் சான்றோரின் சொல் கேட்ட வழியே
இனிதாய் நடை போட்டால் மாறுமுன் விதியே!


[கடைசியாக கவிதைக்கு ஒரு முத்தாய்ப்பு!]

அச்சச்சோ! போதும் நிறுத்து
ஒழுக்கம்  என்ன
இறைவன் ஆணைச் சட்டமா?
அதை மீறுவது  பெரிய குற்றமா?

மீடியாக்களால் மூடப்பட்ட மனங்களின் ஏளனக் குரல்
மீண்டும் மீண்டும் தாக்க-
ஒழுக்கம் இழந்தது கடல்
முகத் திரையால்
கொன்று குவித்தது பல உடல்!

மனமே இறைவன் வாழும் ஆலயம்!
மானுட ஒழுக்கமே அவ்வாலயத்தின் கோபுரம்!
மனதில் இருத்து  இதை மாத்திரம்
மனிதா நீ நடந்தால்
மாறும்  ஒரு சரித்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக