சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

படி;படை;பயன்படு

புதன், 12 ஜனவரி, 2011

மகாத்மாவின் 14 வழி

௧. முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஒருவருக்காக மட்டுமில்லை, எல்லோருக்காகவும். நீங்கள் எடுக்கும் ஒரு
முடிவினால் வேறு யாரவது பாதிக்கப்படுவார்களா என்று யோசித்துப் பழகுங்கள்.

௨.நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால், அப்படி இறங்கியபிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக்
கவலைப்படக்கூடாது.

௩. ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்குப் பிடிக்காதவர்கள்மீது கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப்
புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.

௪. உங்களுடைய நண்பர் அல்லாது உறவினர் அல்லது உங்களுக்குப் பிடித்தவர் என்பதற்காகச் சிலருக்குமட்டும்
அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள்.எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.

௫. பள்ளி, கல்ல்லூரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.
புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

௬. உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள்
யாருக்கும் உபயோகப்படாது.

௭. ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள்,புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த
ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும். நாம் ' முடியாது' என்று நினைத்த விஷயத்தை கண்ணெதிரே
சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள். தேடுங்கள்.

௮. வன்முறை எதையும் சாதிக்காது.ஒருவேளை நீங்கள் வன்முறையின்மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள்
முழுவதும் ஏற்படுகிற குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

௯. 'எப்படியும் வாழலாம்' என்று இல்லாமல் 'இப்படிதான் வாழ வேண்டும்' என்கிற உறுதியை, கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை
வளர்த்துக்கொள்ளுங்கள்.

௧௦ அடுத்தவர்களை அதிகாரத்தின்மூலம் ஜெயித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சர்வாதிகாரித்தனத்தை தவிர்த்து
அனைவரையும் அன்பால் கட்டிப்போடப் பாருங்கள்.


௧௧. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை. எதையும் கேள்வி கேட்கப் பழகுங்கள்.

௧௨. அதிகாரம் கைக்கு வந்தவுடன் கூடவே ஆடம்பரமும் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். அனுமதிக்க கூடவே ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும் .அனுமதிக்காதீர்கள் !எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உளத்தில் இருக்கட்டும் .


௧௩.'கேள்வி கேட்காமல் நான் சொல்வதை செய் ' என்று சொன்னால் கேள்விகள் வரும்.'இதைச் செய்தால் உனக்கும் எனக்கும் ,நமக்கும் ,சமூகத்துக்கும் இந்தப் பலன்கள் உண்டு'என்று ஒருவரிடம் புரிய வைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு எங்கேயும் குதிக்கத் தயாராகி விடுவார்கள்.


௧௪.உண்மை என்பது உங்களுடைய ஒற்றை வரி விளக்கமாக இருக்கட்டும்.ஏனெனில்,கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும்.உண்மை மட்டும் தான் ஜெயிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக