தலைவன் .தாமதமாக வந்த அவள் சொன்னாள்:
''வெட்டியதால் சாகவில்லை.
வெட்டாதிருந்தால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை.
சாகாதிருந்தால் செத்திருப்பேன்.''
தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:
வரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.
அப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால்நான் செத்திருப்பேன்.
சிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான்செத்திருப்பேன்.
ஒரு முறை கம்பரும்,சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தனர்.அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர் காலில் படும்படி இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.நீர் வேட்கை கொண்ட கம்பர்,அந்த ஆற்றின் தெள்ளிய நீரைக் கையில் அள்ளிக் குடித்தார்.இதைக் கண்ட மன்னர்,கம்பரை மட்டம் தட்ட எண்ணி,''கம்பரே,என் காலில் விழுந்த நீரைத் தானே நீர் குடித்தீர்?''என்று கிண்டலாகக் கேட்டார்.அதற்கு கம்பர்,'நீரே காலில் விழுந்தால் நான் என்ன செய்வது?'என்று பதிலுரைத்தார்.
முக்காலைக் கைப்பிடித்து,மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தால் பதூரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கத் தேய்.
இதன் பொருள்:
முக்காலைக் கைப்பிடித்து =இரண்டு கால்கள் பற்றாமல் மூன்றாவது காலாகக்
கைத்தடி ஊன்றி
மூவிரண்டு போகையிலே =(மூவிரண்டு=ஆறு) வழிநடக்கும் போது
அக்காலை
ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள்
அழுந்தக் கடித்தால்=காலில் தைத்தால்
பதூரதன் புத்திரன்=தசரதனின் மகன் ராமன்
மித்திரன்=நண்பன் (ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின்=எதிரியின்(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின்=மனைவியின்(வாலியின் மனைவி தாரை)
கால் வாங்கத் தேய்=(தாரை என்ற வார்த்தையில் காலைஎடுத்தால்,தரை)
தரையில் தேய்.
அதாவது காலில் நெருஞ்சி முள் குத்தினால் ,காலைத் தரையில் தேய்க்க வேண்டும்.
பத்துக்கால் மூன்று தலை
பார்க்கும் கண் ஆறு முகம்
இத்தலையில் ஆறு வாய்.
ஈரிரண்டாம் -இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன்!.
உவந்தேன்!களி கூர்ந்தேன்!
யாரிடத்தில் கண்டேன்,பகர்.
இப்பாடல் வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியைப் பார்த்துப் பாடப்பட்டது.
பொருள்: உழுது கொண்டிருந்த இரண்டு மாட்டுக்கும் எட்டு கால்;உழவனுக்கு
இரண்டு கால்;மொத்தம் பத்து கால்.
மாடுகளின் தலை இரண்டு;உழவனின் தலை ஒன்று;மொத்தம் மூன்று தலை.ஆறு கண்கள்.
மாடுகளின் முகம் இரண்டு;உழவனின் முகம் ஒன்று;அப்போது வெயில் ஏறும் நேரம்,எனவே ஏறுமுகம் ஒன்று;ஏர் முகம் ஒன்று;உழுகிற கொழுமுகம் ஒன்று;ஆக மொத்தம் ஆறு முகம்.
மாடுகளின் வாய் இரண்டு;உழவனின் வாய் ஒன்று;கொழு வாய் (கலப்பை நுனி ) ஒன்று ;மொத்தம் நான்கு வாய்.(ஈரிரண்டுநான்கு)
மார்கழிக் குளிரில் புலவர் ஒருவர் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்.அப்போது இன்னொரு புலவர் சால்வையுடன் வந்தார்.முதல் புலவர் சொன்னார்,''பனிக் காலம் கொடியது,''இரண்டாவது புலவர் சொன்னார்,'பனிக்காலம் நன்று.'
முதல் புலவர் சற்று யோசித்து,''ஆமாம்,..பனிக்காலம் நன்று,'என்றார். அருகில் இருந்தவருக்கு ஒரே குழப்பம்.முதல் புலவர் தன கருத்தை வேகமாக மாற்றிக் கொண்டதற்கான காரணத்தை வினவினார்.அவர் சொன்னார்,'இருவரும் ஒரே கருத்து தான் கொண்டிருக்கிறோம்.'
அருகில் இருந்தவருக்கோ குழப்பம் அதிகரித்தது.குறிப்பறிந்து முதல் புலவர் சொன்னார்,''நான்பனிக்காலம் கொடியது என்றேன்.அவர் பனிக்கு ஆலம் நன்று என்றார்.ஆலம் என்றால் விஷம்.அதாவதுபனியைக் காட்டிலும் விஷம் பரவாயில்லைஎன்கிறார்.அவ்வளவு பனிக்கொடுமை.''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக